உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடம் கொடுத்தும் பட்டா வழங்கவில்லை ஊராட்சி தலைவர் மனு

இடம் கொடுத்தும் பட்டா வழங்கவில்லை ஊராட்சி தலைவர் மனு

திருவள்ளூர்: ஆதிதிராவிடர் இனத்தவருக்கு இடம் கொடுத்து 25 ஆண்டுகளாகியும், அளவீடு செய்து பட்டா வழங்காததால், உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருவாலங்காடு ஒன்றியம், முத்துகொண்டாபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ் திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:திருவாலங்காடு ஒன்றியம், முத்துகொண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி மக்கள், 30 குடும்பத்தினருக்கு 1999ல் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, இலவச வீட்டு மனை உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இடம் ஒதுக்கியும், அவர்களுக்கு வீட்டு மனை அளவீடு செய்து, இலவச பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை தொடர்பு கொண்டு, பட்டா வழங்க கோரியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், திருத்தணி தாசில்தாரிடம் மனு அளித்தும், எவ்வித பயனுமில்லை. இதனால், இலவச வீட்டு மனை பட்டா ஆணையுடன், தங்களுக்கு எந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியாமல், கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், ஒரே வீட்டில், இரண்டு, மூன்று குடும்பத்தினர் வசித்து வரும் அவலம் தொடர்கிறது. எனவே, ஆதிதிராவிடர் மக்கள் மீது கருணை கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து, கணினி பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற கலெக்டர் பிரபுசங்கர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ