உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பந்தல் இங்கே... தண்ணீர் எங்கே? கட்சிகளுக்கு மக்கள் கேள்வி

பந்தல் இங்கே... தண்ணீர் எங்கே? கட்சிகளுக்கு மக்கள் கேள்வி

திருவள்ளூர்,:கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருவள்ளூரில் பல இடங்களில் அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தலைமை தபால் நிலையம் முன்புறம், புங்கத்துார் அ.தி.மு.க., 15வது வார்டு கிளை சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பந்தல் மட்டும் தலைவர்கள் படத்துடன் பிளக்ஸ் பேனர்களுடன் பளீச் என திறக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் இல்லாமல் இருப்பதால் சுட்டெரிக்கும் வெயிலில் தாகம் தீர்க்க வரும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.திறப்பு விழாவை ஆடம்பரமாக காட்டும் அரசியல் கட்சியினர், தண்ணீர் பந்தலை முறையாக பராமரித்து, எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் பராமரிக்க வேண்டுமென, திருவள்ளூர் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை