உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாய்க்கு பாதை அடைப்பால் வௌ்ளக்காடாகும் சாலை

கால்வாய்க்கு பாதை அடைப்பால் வௌ்ளக்காடாகும் சாலை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி, பஜார் பகுதியில் குடியிருப்புகள் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து கழிவுநீர் செல்ல சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் மழைநீர், கால்வாய்க்கு செல்ல வசதியாக ஆங்காங்கே துளை போடப்பட்டு இருந்தது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் அந்த துவாரம் வாயிலாக கால்வாயில் சேர்ந்தது. அரசு நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இல்லாததால், மணல் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் வியாபாரிகள் தங்களின் கடைகளுக்கு முன்னால் மணல் கொட்டி மேடாக்கி உள்ளனர். சில இடங்களில் சிமென்ட் தரை அமைத்ததால், மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி விடுகிறது. தேங்கும் நீரில் கொசுக்கள் உருவாகி, காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சாலையோரம் கால்வாய் தண்ணீர் செல்லும் இடங்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை