உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிடப்பில் போடப்பட்ட நிழற்குடை கட்டட பணி மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார் பயணியர் அவதி

கிடப்பில் போடப்பட்ட நிழற்குடை கட்டட பணி மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார் பயணியர் அவதி

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி.இப்பகுதி வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி தொழிற்சாலை பேருந்து கனரக வாகனம் என தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி பயன்பாட்டிலிருந்து பயணியர் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகம் அருகே தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒன்றியக்குழு மற்றும் மாவட்டக் கவுன்சிலர் ஆகியோர் நிதியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது நிழற்குடை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மேல்நல்லாத்துார் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு குப்பை கொட்டும் இடமாகவும் மீன்கடையாகவும் மாறியுள்ளது. இதேபோல் இந்த நெடுஞ்சாலையில் கீழ்நல்லாத்துார் பகுதியில் உள்ள 5 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை பயணியர் நலன்கருதி விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை