உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆற்காடு குப்பத்தில் விபத்து தடுக்க வேகத்தடை வேண்டும்

ஆற்காடு குப்பத்தில் விபத்து தடுக்க வேகத்தடை வேண்டும்

திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஆற்காடு குப்பம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆற்காடு குப்பம் கிராமம் மற்றும் ஆந்திர மாநிலம் இல்லத்துார் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலைகள் உள்ளன. இந்த சந்திப்பு சாலைகளில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்கும், நெடுஞ்சாலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலை சந்திப்பில் சிக்னல் மற்றும் வேகத்தடை இல்லாததால் தினமும் குறைந்த பட்சம் இரு விபத்துக்களாவது நடந்து வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதியில் கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விபத்துக்களை தடுப்பதற்கு, ஆற்காடுகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சாலைகள் சந்திப்பு பகுதியில், வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வர்ணம் பூசாத வேகத்தடை

திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.பல பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வேகத்தடைகளில் ஒளிரும் வெள்ளை வர்ணம் பூசப்படாததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர், நடவடிக்கை எடுத்து, நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு ஒளிரும் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ