உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோழி திருடிய மூவருக்கு சிறை

கோழி திருடிய மூவருக்கு சிறை

கடம்பத்துார்,கடம்பத்துார் ஒன்றியம் செஞ்சி மதுரா கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன், 49. கடந்த 3ம் தேதி இவரது வீட்டில் வளர்த்து வந்த 20 கோழிகள் மாயமானது. இதுகுறித்து ராஜன் கொடுத்த புகாரின்படி கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் வேப்பஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 18, தினேஷ், 21, வெங்கடேசன், 30 ஆகிய மூவரும் கோழி திருடியது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த கடம்பத்துார் போலீசார் கிளைச்சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை