உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுப்பேட்டை மோகன்பாபு, 24, என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம், 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே எம்.என்.கண்டிகை கிராமத்தில், கூடுதல் விலைக்கு மதுவிற்றுக்கொண்டிருந்த லதா, 44, என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம், 18 மது பாட்டில்கள், நான்கு பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை