மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
1 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
1 hour(s) ago
பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், வேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கடமஞ்சேரி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கும்.இதற்காக, மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கிராமவாசிகள் இந்த குடிநீரை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த நிலையில், நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால், கிராமவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலையிலும், கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் உவர்ப்பு நீரையும் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குடிக்க மற்றும் சமைக்க குடிநீர் கேன்களை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகிஉள்ளனர்.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:நான்கு நாட்களாக குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. குடிநீர் வினியோகம் வழங்கும் பணியில் உள்ள தனியார் ஒப்பந்த ஊழியர்கள், சரியான பதில் தருவதில்லை.இங்கு, ஏழை கூலித்தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். அனைவரும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி, பயன்படுத்த முடியாது. தினமும் காலி குடங்களுடன் காத்திருக்கிறோம். கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 hour(s) ago
1 hour(s) ago