உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சர்வதேச மாஸ்டராவதற்காக செஸ் கோப்பையை வெல்வாரா குணால்?

சர்வதேச மாஸ்டராவதற்காக செஸ் கோப்பையை வெல்வாரா குணால்?

சென்னை: இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக, ஐ.எம்., நார்ம் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் போட்டியை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சென்னையில் நடத்தி வருகிறது.நான்காம் கட்ட போட்டி, போரூரில் நடக்கிறது. நான்கு தமிழக வீரர்கள் உட்பட 10 வெளிநாட்டு வீரர்கள் ரவுண்ட் ராபின் முறையில் மோதி வருகின்றனர். நேற்று எட்டாவது சுற்றில், ரஷ்யா வீரர் டேவிட், மஹாராஷ்டிரா வீரர் ஜெய்வீர் மகேந்திருவை வீழ்த்தினார். இதனால், 6.5 புள்ளிகள் பெற்று, டேவிட் முன்னிலையை தக்க வைத்தார். கேரளாவின் கல்யாணி, தமிழக வீரர் ராகவனை வீழ்த்தி, 4.5 புள்ளிகள் பெற்றார். எட்டு சுற்றின் முடிவில், தமிழகத்தின் குணால் 6 புள்ளிகள் பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளார். ஸ்லோவாக்கியா மாணிக் மிகுலாஸ், ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளில் உள்ளனர்.தொடர்ந்து, தமிழக வீரர் ராகவன், மஹாராஷ்டிராவின் ஜெய்வீர் தமிழகத்தின் சுரேந்திரன் ஆகியோர் தலா 4 புள்ளிகளில் உள்ளனர். இன்றுடன் போட்டிகள் நிறைவடைவதால், குணால் அல்லது ரஷ்யா வீரர் டேவிட், கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகளவில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை