உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா?

திருத்தணி கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா?

திருத்தணி:திருத்தணி கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகம், 6 கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் திருத்தணி கால்நடை மருந்தகத்திற்கு தினசரி, 100 கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வருகின்றனர். அவற்றிக்கு சிகிச்சை மற்றும் செயற்கை கருவூட்டல் மருத்துவர் அளிக்கின்றனர். இதுதவிர, தினமும், 15-25 செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. செல்லப்பிராணிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க, எக்ஸ் - ரே, ஸ்கேன் மற்றும் ரத்தப்பரிசோதனை செய்வதற்கு இங்கு வசதியில்லாததால், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.திருத்தணி மருந்தகத்திற்கு, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை சிகிச்சைக்காக ஓட்டி வருகின்றனர். திருத்தணி கால்நடை மருந்தகத்தை பண்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தினால், செல்லப் பிராணிகளுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் மருந்துகள் அதிகளவில் ஒதுக்கீடு கிடைக்கும். கால்நடைகளுக்கு அனைத்து சிகிச்சைகளும் இங்கே வழங்கப்படும். மேலும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கியிருந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். எனவே திருத்தணி கால்நடை மருந்தகத்தை பண்முக மருத்துவமனையாக உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:திருத்தணி கால்நடை மருந்தகத்தை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனிடம் திருத்தணி கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும் என, நான்கு முறை மனு கொடுத்துள்ளேன். அவரும் சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ