மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
7 hour(s) ago
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா, 45. மரம் வெட்டும் தொழிலாளி.நேற்று முன்தினம் சரோஜா அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா, 35 மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் மப்பேடு பகுதியில் மரம் வெட்டும் பணி மேற்கொண்டனர். மாலை பணி முடிந்து மூவரும் 'ஸ்பெளண்டர் பிளஸ் ' இரு சக்கர வாகனத்தில் சென்றனர். மப்பேடு காலனி அருகே சாலையை கடக்க முயன்ற நபரை கண்டதும் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயற்சி செய்த போது நிலைதடுமாறி மீடியன் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மல்லிகா சம்பவ இடத்திலேயே பலியானார். மப்பேடு போலீசார் சடலத்தை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago