உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் 10 கிராமத்தினர் பங்கேற்பு

தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் 10 கிராமத்தினர் பங்கேற்பு

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் அகூர் பகுதியில் தீப்பாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 100 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பொங்கல் அன்று அகூர், பாண்டரவேடு, நெமிலி, பெருமாநல்லுார், திருத்தணி உட்பட 10 கிராமத்தினர் தங்களது குடும்பத்துடன் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டு வருகின்றனர்.அந்த வகையில், நேற்று மாட்டுப்பொங்கலை ஒட்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.

ஆர்.கே.பேட்டை

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், பொங்கல் திருவிழாவை ஒட்டி, உற்சவர், கர்பகவிருட்ச வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார். வங்கனுார் ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில், உற்சவர் சிவபெருமான், வண்டார்குழலிம்மன் மடி மீது உறங்குவது போல், சயன கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை