உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜாக்டோ - ஜியோ மறியல் 144 பேர் கைது

ஜாக்டோ - ஜியோ மறியல் 144 பேர் கைது

திருவள்ளூர்:ஆசிரியர், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; சரண் விடுப்பு, ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கோரிக்கையினை வலியுறுத்தி நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமையில், 96 ஆண், 48 பெண் உள்பட, 144 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி