உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வடக்கில் ஆந்திரா, தெற்கில் தமிழகம் 2 மாநில எல்லையில் தவிக்கும் கிராமம்

 வடக்கில் ஆந்திரா, தெற்கில் தமிழகம் 2 மாநில எல்லையில் தவிக்கும் கிராமம்

பள்ளிப்பட்டு: ஒரே கிராமத்தில் வடக்கு தெரு ஆந்திர மாநிலத்திலும், தெற்கு தெரு தமிழகத்திலும் அமைந்துள்ளதால், இங்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் அரசு ஏற்படுத்தாமல் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், கொடிவலசா ஊராட்சிக்கு உட்பட்டது சின்ன அத்திமாஞ்சேரி. இந்த கிராமத்தில் மொத்தம் உள்ள இரண்டு தெருக்களில், 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடக்கில் உள்ள தெரு ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திலும், தெற்கில் உள்ள தெரு திருவள்ளூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தெருவில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு கான்கிரீட் சாலைகள் போடப்பட்டுள்ளன. இந்த சாலைகள் முறையான பராமரிப்பு இன்றி, மணல் சாலையாக மாறியுள்ளன. கிராமத்தில் உள்ள குடிநீர் குழாய்களும் பராமரிப்பு இன்றி சீரழிந்து உள்ளது. தவிர அங்கன்வாடி மையம், அரசு தொடக்கப் பள்ளி, ரேஷன் கடை, துணை சுகாதார நிலையம், சுகாதார வளாகம் என, எந்தவொரு அரசு அலுவலகமும் கிடையாது. இங்கு வசிக்கும் கொடிவலசா ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள், ஆந்திர மாநில எல்லையை கடந்துதான் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு வர முடியும். எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாததால், இந்த கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை