| ADDED : ஜன 10, 2024 09:57 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம், நாயுடுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரசுல்இஸ்லாம், 27. கடந்தாண்டு அக்., 10ம் தேதி வேலை நிமித்தமாக பெரியபாளையம் அருகே சூளைமேனி கிராமத்திற்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்ப அங்குள்ள சாலையில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற மூன்று பேர் அவரிடம் இருந்த, 10 கிராம் வெள்ளி செயினை பறித்தனர். அதன்பின், மொபைல்போன் வாயிலாக அவரது வங்கி கணக்கில் இருந்து 6,000 ரூபாயை பரிமாற்றம் செய்தனர். இது தொடர்பாக, நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் படி, போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.நேற்று ஊத்துக்கோட்டை அருகே, தாராட்சி கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், டி.ஆர்.குப்பம் பாலசந்தர், 23, அஜித், 25, மாம்பேடு காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிந்தது.அவர்கள், கடந்த அக்., 10ம் தேதி சூளைமேனி கிராமத்தில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.