உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சுகாதார மையத்தின் சாலை சுகவீனம் சீரமைக்க அய்யனேரி மக்கள் கோரிக்கை

 சுகாதார மையத்தின் சாலை சுகவீனம் சீரமைக்க அய்யனேரி மக்கள் கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: துணை சுகாதார மையத்திற்கு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாமல் சுகவீனமாக காட்சியளிக்கிறது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரியில் துணை சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. விசாலமான இடத்தில் சிறப்பான கட்டட வசதியுடன், இந்த துணை சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. சோளிங்கரில் இருந்து திருத்தணி செல்லும் பிரதான சாலையில் இருந்து, இந்த துணை சுகாதார நிலையத்திற்கு வரும் சாலை பராமரிப்பு இன்றி சீரழிந்து உள்ளது. இந்த இணைப்பு சாலையின் பெரும் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இந்த வழியாக நடந்து செல்லும் அப்பகுதி மக்கள், விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால் அச்சத்தில் தவிக்கின்றனர். இந்த சாலையில் உள்ள துணை சுகாதார நிலைய வழிகாட்டி பதாகையும் செடி, கொடிகளில் மறைந்துள்ளது. எனவே துணை சுகாதார நிலையம் சீராக பராமரிக்கப்படுவது போல், அந்த மையத்திற்கான இணைப்பு சாலையையும் சீராக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி