உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிறந்த நாள் கொண்டாடியவர் திருமண ஏக்கத்தில் தற்கொலை

பிறந்த நாள் கொண்டாடியவர் திருமண ஏக்கத்தில் தற்கொலை

மதுரவாயல், சென்னை, மதுரவாயல், நுாம்பல் பிள்ளையார் மடம், தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகான் குட்டி, 27, மெக்கானிக்.நேற்று முன்தினம் இவருக்கு பிறந்த நாள். நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து மகான் குட்டி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். பின் இரவு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் அறையில் இருந்து வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அறையின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு மகான் குட்டி துாக்கில் பிணமாகக் கிடந்தார். தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் மகான் குட்டி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சரியான வரன் அமையாததால், திருமண ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை