உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடம்பத்துார் அரசு பள்ளியில் பாடம் நடத்திய கலெக்டர்

கடம்பத்துார் அரசு பள்ளியில் பாடம் நடத்திய கலெக்டர்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை 620 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி குறித்து தலைமையாசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கடம்பத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரேவதி பள்ளி நெடுஞ்சாலையோரம் கனரக வாகனங்கள் நிற்பதால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.இதையடுத்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கடம்பத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். வரும் காலங்களில் வாகனங்களை நிறுத்த நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டுமெனவும் கடம்பத்துார் உதவி ஆய்வாளர் லோகநாதன் மற்றும் போலீசாரிடம் அறிவுறுத்தினார்.அரசு பள்ளி அருகே நெடுஞ்சாலையில் மழைநீர் குளம் போல் தேங்குவதை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பின் பள்ளிக்கு சென்று 10, 12ம் வகுப்பு மாணவர்களிடம் கல்வி குறித்த கேள்விகள் கேட்டு வகுப்பறையில் பாடம் எடுத்தார். மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார்.ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் ரூபேஷ், கடம்பத்துார் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ