உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செயின் பறிக்க முயற்சி தம்பதிக்கு வெட்டு

செயின் பறிக்க முயற்சி தம்பதிக்கு வெட்டு

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கணேஷ் நகரில் வசிப்பவர் தனஞ்செயன், 48. இவரது மனைவி ரூபாவதி, 36. இருவரும் நேற்று முன்தினம் உறவினர் திருமண வரவேற்பிற்கு சென்று விட்டு, இரவு 10:30 மணியளவில் அரக்கோணம் வள்ளலார் தெரு வழியாக, கணேஷ் நகரில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றனர்.அப்போது பின்னால் யமஹா டியூக் பைக்கில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த இரு மர்ம நபர்கள் ரூபாவதி கழுத்திலிருந்த, 5 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றனர். ரூபாவதி செயினை கையில் பிடித்துக்கொண்டார். மர்ம நபர்களை தனஞ்செயன் பிடிக்க முயன்றபோது அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் கணவன், மனைவி இருவரையும் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.காயமடைந்த இருவரும் அரக்கோணம் டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள வீடு மற்றும் தெருக்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி