உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஊட்டச்சத்து பெட்டகம் கிடைப்பதில் தாமதம்: கர்ப்பிணியர் புலம்பல்

 ஊட்டச்சத்து பெட்டகம் கிடைப்பதில் தாமதம்: கர்ப்பிணியர் புலம்பல்

திருவாலங்காடு: திருவாலங்காடு வட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஊட்டச்சத்து பெட்டகம் தாமதமாக கிடைப்பதாக கர்ப்பிணியர் புலம்புகின்றனர். திருவாலங்காடு வட்டாரத்தில் பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், திருவாலங்காடில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்டு, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, மாதந்தோறும் 30 - 50 கர்ப்பிணியர் சிகிச்சைக்காக வருகின்றனர். சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணியருக்கு, நான்கு மற்றும் ஆறாவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு ரத்தசோகை, எடை குறைவு, உயிரிழப்பு ஏற்படலாம். இதை தடுப்பதற்காக, கர்ப்பிணியருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவாலங்காடு வட்டாரத்திற்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகம் குறைந்தளவே அனுப்பி வைப்பதாகவும், இதனால், கர்ப்பிணியர் பலருக்கும் நான்காவது மாதம் கிடைக்க வேண்டியது ஐந்தாவது மாதத்திலும், ஆறாவது மாதத்தில் கிடைக்க வேண்டியது ஏழாவது மாதத்திலும் வினியோகிப்படுகின்றன. இதனால், ஊட்டச்சத்து பெட்டகம் கிடைத்தும் பலனில்லை. எனவே, சரியான நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, கர்ப்பிணியர் வலியுறுத்தி வருன்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை