உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் கால்வாய்கள் சீரமைப்பு"தினமலர் செய்தி எதிரொலி

கழிவுநீர் கால்வாய்கள் சீரமைப்பு"தினமலர் செய்தி எதிரொலி

பொன்னேரி : 'தினமலர்' செய்தியால் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீர் செய்தனர். பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட சிவன் கோவில் தெருவில், அகத்தீஸ்வரர் கோவில் உள் ளது. கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.இந்நிலையில், கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாலைகளில் ஓடியதுடன், அகத்தீஸ்வரர் கோவிலின் குளத்திலும் கலந்தது. கழிவுநீர், வீடுகளின் உள்ளேயும் புகுந்ததால், பொதுமக்களே அவற்றை வெளியேற்றினர். இதுகுறித்து, நேற்றைய 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொட ர்ந்து, நேற்று பேரூராட்சி நிர்வாகம், துப்புரவு பணியாளர்களைக் கொண்டு கால்வாய்களிலிருந்து குப்பை கழிவுகளை அகற்றியது. கழிவுநீர் வழிந்தோடி குளத்தில் கலப்பதும் தடுக்கப்பட்டு, குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய்கள் வழியாக சீராக சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை