மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
3 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
3 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
3 hour(s) ago
சென்னை : திருவள்ளூர் மாவட்ட டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில், அம்பத்துார் சி.சி., அணி வெற்றி பெற்றது.டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், திருவள்ளூர் மாவட்ட லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில், முதலாவது டிவிஷன் போட்டியில், கொரட்டூர் சி.சி., மற்றும் அம்பத்துார் சி.சி., அணிகள் மோதின.முதலில் பேட் செய்த கொரட்டூர் சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 43.1 ஓவர்களில் ஆல் ஆவுட் ஆகி, 114 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கிய அம்பத்துார் சி.சி., அணி, 45 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 115 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.நான்காவது டிவிஷன் போட்டியில், டி.வி.எஸ்., லுாகாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 29 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 138 ரன்களை அடித்தது. அடுத்து பேட் செய்த யுனைடெட் அணி, 30 ஓவர்களில், 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago