திருத்தணி கோவிலில் மயங்கி விழுந்து முதியவர் பலி
திருத்தணி: முருகன் கோவிலில் தரிசனம் செய்ய காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து பலியானார். திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி நியூ பைபாஸ் டவுன் பகுதி சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 71. இவர் நேற்று தன் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். பொதுவழியில் தரிசனம் செய்ய வரிசையில் நின்றுக் கொண்டிருந்தபோது, பன்னீர்செல்வம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். குடும்பத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு மலைக்கோவிலில் உள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.