உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகத்தில் தீ: அரசு ஆவணங்கள், இயந்திரங்கள் நாசம்

 ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகத்தில் தீ: அரசு ஆவணங்கள், இயந்திரங்கள் நாசம்

சென்னை: திருமங்கலத்தில் அமைந்துள்ள, ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அரசு ஆவணங்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமாயின. அண்ணாநகர், 12வது பிரதான சாலையில், ஐந்து மாடி கட்டடத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, நேற்று காலை 8:30 மணியளவில், அலுவலகம் இயங்கும் தரைதளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் முதல் தளத்தில் உள்ள கேன்டீன் மற்றும் ஓய்வு அறைக்குள் மளமளவென தீ பரவியது. இதையடுத்து, தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சத்யநாராயணன் தலைமையில், கோயம்பேடு, வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, அம்பத்துார், ஜெ.ஜெ., நகர் உள்ளிட்ட 10 நிலையங்களில் இருந்து, வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், அலுவலகத்தில் இருந்த 100 கணினிகள், 10 'ஜெராக்ஸ்' இயந்திரங்கள், 30 'ஏசி' உள்ளிட்ட பொருட்களும், அரசு ஆவணங்களும் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து, அண்ணா நகர் தீயணைப்பு நிலைய இணை இயக்குநர் சத்திய நாராயணன் கூறுகையில், ''தரைத்தளத்தில் இருந்து முதல் மாடி வரை தீ பரவியதால், போராடி தீயை அணைக்க வேண்டி சூழல் ஏற்பட்டது. கண்ணாடிகளை உடைத்து, கம்ப்ரெஸ்கள் உதவியுடன் அணைத்தோம். ஏராளமான ஆவணங்கள் எரிந்ததால், கரும் புகை வெளியேறியது. விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி