உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செங்குன்றத்தில் 2 கடைகளில் தீ விபத்து

செங்குன்றத்தில் 2 கடைகளில் தீ விபத்து

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் சந்திப்பு பகுதியில் ஒரு உணவகத்தில் நேற்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை ஒட்டியுள்ள டீ கடைக்கும் தீ பரவியது.செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தகவல் வந்தது. அதன்படி, தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள், வாகனத்துடன் விரைந்து சென்றனர். உணவகம், டீ கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை, ஒரு மணிநேரம் போராடி முற்றிலுமாக அணைத்தனர்.தீயில், உணவகம், டீ கடையின் மேஜை, நாற்காலிகள், பாத்திரங்கள் மற்றும் மின்சார பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.செங்குன்றம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை