மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
15 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
15 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், மணவாள நகர், கடம்பத்துார், பேரம்பாக்கம், பாப்பரம்பாக்கம், திருநின்றவூர், திருமழிசை உட்பட 20க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் மூலம் குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் மின் கணக்கீட்டாளர் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, மின் கணக்கீட்டாளர் பணியிடம் அதிகளவில் காலியாக உள்ளது.இதனால், பல இடங்களில் மின் பயன்பாடு அளவை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்திற்கு வரும் பயனாளிகளிடம் மின் ஊழியர்கள், 'மின் கணக்கீட்டாளர் வரமாட்டார். 'அதனால், நீங்கள் கடந்த மாதம் பில் தொகையை கட்டுங்கள்' என, அலட்சியமாக தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதிவாசிகள் மின்வாரியத்துறை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், 100 யூனிட்டுக்கு மேல் மின்சார அளவிற்கு கட்டணம் மாறுபட்டால், குடியிருப்புவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.ஏற்கனவே, மின்சார துண்டிப்பு குறித்து புகார் அளித்தாலே, காலம் தாழ்த்தி வந்து தான் சீரமைப்பு பணி மேற்கொள்வர். தற்போது, மின் கணக்கீட்டாளர் பணியிடமும் காலியாக உள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது:தமிழக மின் வாரியங்களில் ஓய்வுபெறும் ஊழியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஆண்டுதோறும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. சில பணியிடங்கள் மட்டும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.காலிப் பணியிடங்களில் பணியாளர்களை நியமிக்கக் கோரி, மின்வாரிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 1.44 லட்சமாக உள்ளது. இதில், தற்போதைய நிலவரப்படி மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 50,000க்கும் மேல் உள்ளது.இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், மின்சாதன பழுதுகள் சரி செய்வது, மின் கணக்கீடும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தாமதமாகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.மணவாள நகர்.
கடம்பத்துார் ஒன்றியத்தில் கடம்பத்துார், பேரம்பாக்கம், பாப்பரம்பாக்கம், மணவாளநகர் ஆகிய பகுதிகளில் மின்கணக்கீட்டாளர் பணியிடங்கள் தலா இரண்டு வீதம் காலியாக உள்ளன. இதில், மணவாளநகர் பகுதியில் குடியிருப்புவாசிகளிடம் கடந்த மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே செலுத்துங்கள் என, மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சில சமயம், 'மின் மீட்டரில் உள்ள அளவீடை குறித்து வந்து, எங்களிடம் காண்பித்து அதற்குண்டான பணம் செலுத்துங்கள்' என்கின்றனர்.- பகுதிவாசிகள்
15 hour(s) ago
15 hour(s) ago