உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா விற்றவர் கைது ரூ.25,000 அபராதம்

குட்கா விற்றவர் கைது ரூ.25,000 அபராதம்

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், ரயில் நிலையம் செல்லும் சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் ரவி 50. இவர் ஹான்ஸ், போதைப்பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் எஸ்.ஐ., நாகபூஷனம் தலைமையிலான போலீசார் நேற்று கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில், 1 கிலோ, 800 கிராம் எடையிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடைக்கு 25,000 ரூபாய் அபராதமாக விதித்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை