உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

திருவள்ளூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று, 15ம் தேதி காலை 10:00 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 15-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள், 100-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர்.முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி