உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகரி தேசம்மன் கோவிலில் வரும் 11ல் கும்பாபிஷேகம்

நகரி தேசம்மன் கோவிலில் வரும் 11ல் கும்பாபிஷேகம்

நகரி:சித்துார் மாவட்டம், நகரி அடுத்த டி.ஆர்.கண்டிகை கிராமத்தில் உள்ள, தேசம்மன் கோவில், 3.60 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்தன. கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும், 11ம் தேதி நடக்கிறது.கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி, டி.ஆர்.கண்டிகை போத்துராஜா கோவில் அருகில் இருந்து, ஆந்திர மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஜா மற்றும் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கும்பாபிஷேகத்திற்காக சீர்வரிசை தட்டுகளுடன், மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்றனர். அமைச்சர் ரோஜாவை, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுபாபு, கோவில் செயல் அலுவலர் ராமச்சந்திரய்யா ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் ரோஜா கணபதி ஹோமமேடைக்கு வந்து சாஸ்திர முறைப்படி பூஜைகள் செய்து, வேதவிற்பன்னர்களின் கணபதி ஹோமத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. வரும், 11ம் தேதி, நண்பகல், 11:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வேணுபாபு மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை