| ADDED : ஜன 07, 2024 01:30 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த வல்லுார் பகுதியை சேர்ந்தவர் ஆசிர்வாதம், 72; பெட்ரோல் பங்க் ஊழியர். பணிக்கு சென்றுவிட்டு, நேற்று மதியம், 12:00 மணிக்கு சைக்கிளில் வல்லுார் - அத்திப்பட்டு புதுநகர் சாலை வழியாக வீடு திரும்பினார்.வல்லுார் அருகே செல்லும்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஆசிர்வாதத்தின் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆசிர்வாதம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று விபத்து ஏற்படுத்திய லாரியை பிடித்தனர். லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு கேட்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, இறந்தவர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தனர். அதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.