உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, ஜன., 30, பிப்.,13 வரை இரு வாரம் தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், தொழுநோய் ஒழிப்பு மற்றும் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.தொழுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது. தொழு நோயாளர்களை கண்டறியும் முகாம்கள், இந்த நாட்களில் மாவட்டம் முழுதும் நடத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தொழு நோய்களுக்கான கூட்டு மருந்து சிகிச்சை அனைத்து மருத்துவமனைகளிலும், இலவசமாக வழங்கப்படுகிறது. எந்த நிலையிலும், தொழுநோயை குணப்படுத்த இயலும். தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில், 10,000 பேருக்கு, 0.49 சதவீதம் என்ற அடிப்படையில் தொழுநோயாளர்கள் உள்ளனர். வரும், 2027ம் ஆண்டிற்குள் தொழுநோய் இல்லாத மாவட்டமாக, உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் பிரபுசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை