உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

அரக்கோணம் : அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று காலை அரக்கோணம் காந்தி ரோடு, ரயில் நிலையம், பஜார் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பஜார் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே, கூடுதல் விலைக்கு கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த நபரை பிடித்தனர். அவர் அரக்கோணம் அடுத்த அம்மனுார் பகுதியை சார்ந்த சுரேஷ் பாபு, 38, என்பதும், கூடுதல் விலைக்கு மது விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த, 15 குவாட்டர் மது பாட்டில்களை டவுன் போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி