உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி

 சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி

திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி காரணமாக அரவை நிறுத்தப்பட்டது. திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலைக்கு திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து டிராக்டர், லாரி வாயிலாக கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப் படுகிறது. நடப்பு பருவத்திற்கான அரவை அக்டோபர் மாதம் துவங்கியது. 50 நாட்களை கடந்த நிலையில் ஆலை இயந்திரங்களை பராமரிக்க நேற்று இரவு அரவை நிறுத்தப்பட்டது. இதுவரை 75,000 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. நாளை அரவை துவங்கும் என, ஆலை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை