உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சிறுமியை சீரழித்த தாயின் 2வது கணவனுக்கு 17 ஆண்டு சிறை

 சிறுமியை சீரழித்த தாயின் 2வது கணவனுக்கு 17 ஆண்டு சிறை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, 13 வயது சிறுமியை சீரழித்த தாயின் இரண்டாவது கணவருக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், தாய்க்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை போலீஸ் எல்லையை சேர்ந்தவர் தரணி, 54. இவர் 2018ம் ஆண்டு, 46 வயது பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அப்போது, அப்பெண்ணுக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த 13 வயது சிறுமியை, அப்பெண்ணின் ஒத்துழைப்போடு, தரணி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, 13 வயது சிறுமி, தன் பள்ளி ஆசிரியரிடம் தகவல் கூறியுள்ளார். பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் தரணி மற்றும் சிறுமியின் தாயையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிவில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தரணிக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார். உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, நேற்று இருவரையும், ஆர்.கே.பேட்டை போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை