| ADDED : பிப் 13, 2024 06:35 AM
திருத்தணி: தேசிய அளவிலான கால்பந்து போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாக்பூர் ராஜ்நாத் தனில், கடந்த, 9ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில் பத்து மாநிலங்களில் இருந்து, கால்பந்து குழு வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழகம் அணி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் பங்கேற்றனர்.மூன்று நாட்கள் நடந்த போட்டியில், நான்காம் இடத்தை திருத்தணி அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிடித்தனர். திருத்தணி அரசு பள்ளி மாணவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு கால்பந்து கழக செயலர்கள் உடன் சென்றிருந்தனர்.தேசிய அளவிலான கால்பந்து போட்டியில், முதலிடத்தை சத்தீஸ்கர் மாநில அணியும், இரண்டாம் இடத்தை, ஜார்க்கண்ட் மாநில அணியும், மூன்றாவது இடத்தை மத்தியபிரதேசம் மாநில அணியும் பிடித்துள்ளன.