உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் உறவினர்கள் வாக்குவாதம்

சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் உறவினர்கள் வாக்குவாதம்

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நெப்போலியன், 35; லாரி ஓட்டுனர். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் நீலகண்டன், ரவிகுமார் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நெப்போலியன் மனைவி பட்டும்மாவை, நீலகண்டன், ரவிகுமார் ஆகியோர் தாக்கியதால் பலத்த காயமடைந்தார்.தொடர்ந்து, நெப்போலியன் தன் மனைவியை சிகிச்சைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.அப்போது, இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர், அடிதடி சம்பவம் என்பதால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வந்தால் தான், சிகிச்சை அளிக்க முடியும். அதுவரை வரண்டாவில் படுத்துக் கொள்ளுங்கள் என்றார்.இதனால், ஆத்திரமடைந்த நெப்போலியன் மற்றும் உறவினர்கள் பெண் மருத்துவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்கு பின் தான் பட்டும்மாவுக்கு முதலுதவி அளித்ததாக கூறப்படுகிறது.l அதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சலியைச் சேர்ந்த சிவா என்பவரின், 9 வயது பெண் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது, அந்த பெண் மருத்துவர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. மேல்சிகிச்சைக்காக, திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் வரவழைப்பதிலும் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவா மற்றும் அவரது உறவினர்கள், பெண் மருத்துவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாள் இரவில், இரு சம்பவத்தால், திருத்தணி அரசு மருத்துவமனையின் மீது நோயாளிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை