உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.7 லட்சத்தில் புதிய மின்மாற்றி

ரூ.7 லட்சத்தில் புதிய மின்மாற்றி

திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் குபேரன் கார்டன் என, 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.இப்பகுதிவாசிகள் குறைந்த அழுத்த மின்சாரத்தால் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து பகுதிவாசிகள் கோரிக்கையை அடுத்து திருமழிசை மின்வாரிய அதிகாரிகள் அதிகாரிகள், 7 லட்சம் மதிப்பில், 100 கே.வி., புதிய மின்மாற்றியை அமைத்தனர்.இந்த மின்மாற்றியை நேற்று முன்தினம் பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.இந்த மின்மாற்றி மூலம் இப்பகுதியில் சீரான மின்சாரம் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் திருமழிசை பேரூராட்சி தலைவர் வடிவேல், செயல் அலுவலர் வெங்கடேசன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முரளி, செயற்பொறியாளர் கணபதி, இளநிலை பொறியாளர் கோதண்டமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ