உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பா.ஜ., தேர்தல் அலுவலகம் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்

பா.ஜ., தேர்தல் அலுவலகம் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்

மயிலாப்பூர்:மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ., சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகம், பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் தொகுதி வாரியாக கட்சி அலுவலகங்களை திறந்து வருகின்றன.அதன்படி பா.ஜ., சார்பில், சென்னை அமைந்தகரையில் தலைமை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.தொடர்ச்சியாக, மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நேற்று முன்தினம், மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில், கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், தேர்தல் அலுவலகம் திறந்ததாக தெரிகிறது. தென்சென்னை லோக்சபா தேர்தல் பொறுப்பாளர் ராஜா தலைமையில், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வணிக ரீதியாக பயன்பாட்டிற்கு எனக் கூறி கோவில் இடத்தை வாங்கி, அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.இதைத்தொடர்ந்து நேற்று காலை, ஹிந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மாவட்ட இணைஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள், இந்த பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை பூட்டி, 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை