உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேவர் பிளாக் சாலை பணி தாமதம் 4 மாதமாக கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர்

பேவர் பிளாக் சாலை பணி தாமதம் 4 மாதமாக கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் தாடூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இருந்து சுடுகாடு மற்றும் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு செல்லும், 64 மீட்டர் இணைப்பு சிமென்ட் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியினர் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில், 15வது மாநில நிதிக்குழு மானியம் மூலம், 64 மீட்டர் நீளத்திற்கு 'பேவர் பிளாக்' சாலை அமைப்பதற்கு, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ள 'டெண்டர்' விடப்பட்டது.இந்த பணியை எடுத்த ஒப்பந்தாரர், நான்கு மாதத்திற்கு முன் பழுதடைந்த சிமென்ட் சாலையை அகற்றி, பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு சமன்படுத்தினார். மேலும், பேவர் பிளாக் கற்களும் கொண்டு வரப்பட்டு, சாலை அமைக்கும் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், நான்கு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.குறிப்பாக, பள்ளியின் முன் சாலை அமைப்பதற்காக கற்கள் மற்றும் 'எம் - சாண்ட்' கொட்டியுள்ளதால், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போதும், விளையாடும் போதும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் பலமுறை ஒப்பந்ததாரரிடம் சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என தெரிவித்தும், சாலை அமைக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்