மேலும் செய்திகள்
கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்
8 minutes ago
வருவாய் மாவட்ட கால்பந்து அம்பத்துார் அரசு பள்ளி வெற்றி
8 minutes ago
பஞ்செட்டியில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
10 minutes ago
திருவாலங்காடு: டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு, ரயில் நிலைய சாலையில் அருந்தும் 'குடி'மகன்களால், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதை, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக, சின்னம்மாபேட்டை மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில் உள்ள ரயில் நிலைய சாலையில், டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள இக்கடைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் 'குடி'மகன்கள் மது அருந்தி செல்ல மதுக்கூடம் இல்லாததால், சாலையோரம் உள்ள பெட்டிக்கடை, ஹோட்டல்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், அவ்வழியாக பள்ளி, கல்லுாரி சென்று வீடு திரும்பும் மாணவ-- - மாணவியர், பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் பணிக்கு சென்று வீடு திரும்பும் பெண்களை, போதை ஆசாமிகள் அச்சுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய திருவாலங்காடு காவல் துறையினர், பெட்டிக்கடைகளில் பணம் பெற்றுக் கொண்டு, நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பெண்கள் மற்றும் மாணவ - மாணவியருக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 minutes ago
8 minutes ago
10 minutes ago