உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 401 விவசாயிகள் சேர்ப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 401 விவசாயிகள் சேர்ப்பு

திருவள்ளூர்:பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், 401 விவசாயிகள் சேர்ந்துள்ளனர்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவரை நெற்பயிர், ராபி பருவ நிலக்கடலை, எள் மற்றும் பச்சைப்பயறு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யும் காலக்கெடு முடிவு பெற்றுள்ளது. இதில், 401 விவசாயிகள், 1,375 ஏக்கர் பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். கரும்பு பயிருக்கு மட்டும், மார்ச் 30 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். பிரீமிய தொகை 1 ஏக்கருக்கு, 3,000 ரூபாய். கரும்பு பயிரில் இதுநாள் வரை, ஏழு விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள், விரைவாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை