உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் ரயில்வே ஊழியர் பலி

சாலை விபத்தில் ரயில்வே ஊழியர் பலி

அரக்கோணம்:திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன், 55. இவர் சென்னையில் ரயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.கண்ணதாசன் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து 'ஹீரோ ஹோண்டா பேஷன்' ரக இருசக்கர வாகனத்தில் அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டையில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றார். அரக்கோணம் -- திருத்தணி சாலையில், மங்கம்மாபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் வந்துபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ