உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரவுடியின் கூட்டாளி துாக்கிட்டு தற்கொலை

ரவுடியின் கூட்டாளி துாக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்:திருமழிசை காவல்சேரி சாலையைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சதீஷ், 24. கடந்த செப்டம்பரில் ஸ்ரீபெரும்புதுார் அருகே படுகொலை செய்யப்பட்ட திருமழிசையைச் சேர்ந்த பிரபல ரவுடி எபினேசர் என்பவரின் கூட்டாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 10 தினங்களாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் நிபந்தனை அடிப்படையில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தன் வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வெள்ளவேடு போலீசார், உடலை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னையால் சதீஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ