உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடன் வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி

கடன் வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி

ஆவடி, ஆவடி அடுத்த, பூந்தமல்லியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 64. இவரிடம், கசாலி என்பவர் 2014ல் அறிமுகமாகி, சொத்தின் பெயரில் வங்கியில் தொழில் கடன் பெற்றுத் தருகிறேன் எனக்கூறி உள்ளார்.கசாலியின் பேச்சை நம்பி, தன் தாய்க்கு சொந்தமான, 2,604 சதுர அடி இடத்தை வங்கியில் அடமானம் வைக்க, முகமது இஸ்மாயில் ஒப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து, எஸ்.பி.ஐ., வங்கிக் கிளையில் இருந்து 1.20 கோடி ரூபாயை, 2014, ஏப்., 21ல், தன் வங்கி கணக்கில் கடனாகப் பெற்ற கசாலி, அதில் 50 லட்சம் ரூபாயை மட்டும், முகமது இஸ்மாயிலுக்கு தந்துள்ளார். மீதிப் பணத்தை தருவதாகக் கூறி, 10 ஆண்டுகளாக இழுத்தடித்துள்ளார்.இது குறித்து ஆவடி போலீசாரிடம், முகமது இஸ்மாயில் புகார் அளித்தார். விசாரணை செய்த போலீசார், பணம் தராமல் தலைமறைவாக இருந்த கசாலியை, நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி