உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழமையான மரத்தை அகற்றாமல் பாதுகாப்பாக கால்வாய் அமைப்பு

பழமையான மரத்தை அகற்றாமல் பாதுகாப்பாக கால்வாய் அமைப்பு

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, ரயில் நிலைய சாலையில் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.குற்றவியல் நீதிமன்றம் எதிரே, மேற்கண்ட கால்வாய் அமையும் பகுதியில், 100ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்டுவா மரம் ஒன்று உள்ளது. மரத்தின் இருபுறமும் கால்வாய் பணிகள் முடிந்தன. கால்வாய் பணிகளுக்கு மரம் இடையூறாக இருந்தது.மரத்தினை அகற்றிவிட்டு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.நிழல் தரும் இதுபோன்ற மரங்களை வளர்ப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும். பழமையான மரங்களை பாதுகாத்திட வேண்டும். மரத்தினை அகற்றாமல் மாற்று வழித்தடத்தில் கால்வாய் அமைக்க திட்டமிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பொன்னேரி நேதாஜி மரவங்கி தன்னார்வு அமைப்பு சார்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.அதையடுத்து நகராட்சி நிர்வாகமும் பழமையான மரத்தினை வெட்டாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவு எடுத்தது. அதற்கு தகுந்தாற்போல் கால்வாய் கட்டுமான பணிகளில் மாற்றம் செய்யப்பட்டது.தற்போது மேற்கண்ட பழமையான மரத்தினை அகற்றாமல் கால்வாய் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மரம் உள்ள பகுதியில், கால்வாயை வளைவாக அமைத்து, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது அனைத்து தரப்பினர் இடையே வரவேற்பை பெற்று உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை