உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கே.கே.சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக்க கோரிக்கை

கே.கே.சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக்க கோரிக்கை

திருத்தணி : கனகம்மாள்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் பி.வி.ரமணாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.,வும், கைத்தறித் துறை அமைச்சருமான ரமணா, நேற்று, திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துகொண்டாபுரம், கனகம்மாள்சத்திரம், கூர்மவிலாசபுரம், வி.ஜி.என். கண்டிகை உட்பட பல கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.கிராம பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என, உறுதி அளித்தார். அப்போது, திரளான மக்கள், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு மனு கொடுத்தனர்.கனகம்மாள்சத்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, அரசு மருத்துவமனையாக உயர்த்த வேண்டும் என, அமைச்சரிடம் அ.தி.மு.க., ஒன்றிய பேரவைச் செயலர் ரமேஷ் மனு கொடுத்தார். ஒன்றியச் செயலர் பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை