உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் அளவு அதிகரிப்பு

கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் அளவு அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை : கண்டலேறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டதாலும், சாய் கிருஷ்ணா கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நீரின் அளவு அதிகரித்துள்ளது.சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர், ஜூன் 21ம் தேதி முதல் திறந்து விடப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை அடைந்தது.தொடர்ந்து வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர், ஆகஸ்ட் 15ம் தேதி வரை, 3 டி.எம்.சி., அளவிற்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி முதல் கிருஷ்ணா நீர், வினாடிக்கு 800 கன அடியாக குறைக்கப்பட்டதால், தமிழகத்திற்கு வினாடிக்கு 109.14 கன அடியாக குறைந்தது.இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு, 1,120 கன அடியாக கிருஷ்ணா நீர் திறந்து விடுவது அதிகரிக்கப்பட்டது. மேலும், சாய்கிருஷ்ணா கால்வாய் உள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக, தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கத் துவங்கியது. நேற்று காலை, 6 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டிற்கு வினாடிக்கு, 533 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.பூண்டி ஏரி நிலவரம்: பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 393 கன அடியும், மழைநீர், 361 கன அடியுமாக, மொத்தம், 754 கன அடி நீர் வருகிறது.ஏரியிலிருந்து, 'லிங்க்' கால்வாய் மூலம் வினாடிக்கு, 94 கன அடியும், 'பேபி' கால்வாய் மூலம், 50 கன அடி நீரும் புழலேரிக்கு அனுப்பப்படுகிறது. ஏரியில் தற்போது, 2008 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரியின் நீர் மட்டம், 31.11 அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை