உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் விற்பனை ஜரூர்

விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் விற்பனை ஜரூர்

திருவள்ளூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி அதன் பொம்மைகள் சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விற்பனையும் ஜரூராக நடந்து வருகிறது.பல பகுதிகளில் சாலையோரங்களில் முகாமிட்டும், வாடகை வீடுகளில் தங்கியும் பொம்மைகளை தயாரித்து விற்று வருபவர்கள் பலர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, தமிழகத்திற்கு குடி பெயர்ந்தவர்கள்.அவ்வாறான குடும்பங்களில் ஒன்று, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே முகாமிட்டுள்ளது.இங்கு சிறிய பொம்மை, 50 ரூபாய் முதல், பெரிய பொம்மை 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விநாயகர், முருகர், சரஸ்வதி, லட்சுமி, தவழும் கண்ணன், சாய்பாபா உட்பட, பல தெய்வங்களின் பொம்மைகள் விற்பனைக்காக சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இங்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவர்லால் தலைமையில், 15 பேர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, பவர்லால் கூறும் போது, 'நான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து, 18 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் பல்வேறு வகையான பொம்மைகளை, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்ற பவுடர் கொண்டு தயாரிக்கிறோம். சிறியதோ, பெரியதோ ஒரு பொம்மையை தயாரிக்க, 4 மணி நேரம் தேவைப்படுகிறது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை