உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்தை அமைச்சர்கள் ஆய்வு

மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்தை அமைச்சர்கள் ஆய்வு

திருவள்ளூர் : காக்களூரில் உள்ள, மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்தை, மாநில ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, கைத்தறித் துறை அமைச்சர் ரமணா ஆகியோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் அமைந்துள்ள சிறு தொழில்துறையின் கீழ் இயங்கி வரும், மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்திற்கு, மாநில ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ரமணா ஆகியோர், நேற்று முன்தினம் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.இச்சோதனைக் கூடம், இந்திய தர நிர்ணய அமைவணம் (பி.ஐ.எஸ்.,), சோதனை மற்றும் அளவீடு ஆய்வுக்கூடத்திற்கான, தேசிய அங்கீகாரக் கழகம் (என்.ஏ.பி.எல்.,) ஆகிய, தேசிய அங்கீகாரத்தினை பெற்றுள்ளது.இச்சோதனைக்கூடம் மூலம், தமிழ்நாடு அரசு வழங்க உள்ள, இலவச திட்டமான மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவற்றின் மாதிரிகளை பரிசோதனை செய்து, சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், இச்சோதனைக் கூடத்தின் பி.ஐ.எஸ்., மற்றும் என்.ஏ.பி.எல்., ஆகிய, தேசிய அங்கீகாரத்தினை நிலை நிறுத்திக் கொள்ளவும், உற்பத்தியாளர்களுக்கு அளித்து வரும் சேவையினை, மேலும் சிறப்பாக தொடரவும், இச்சோதனைக் கூடத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பின், காக்களூரில் உள்ள, இந்தியன் பர்னீச்சர் தயாரிக்கும் கூடத்தினையும், அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இளங்கோவன், சென்னை சேப்பாக்கம் தொழில் வணிகத்துறை மின் மற்றும் மின்னணு இணை இயக்குனர் (பொறுப்பு) சொக்கலிங்கம், மத்திய மின்பொருள் சோதனை கூட உதவி இயக்குனர் புண்ணியகோடி மற்றும் காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை அலுவலர்கள் உள்ளிட்டோர், உடன் இருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை