உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 6 கிலோ கஞ்சா பறிமுதல் மூன்று வாலிபர்கள் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல் மூன்று வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில், கலால் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி, பயணிகளின் உடமைகளை சோதனைஇட்டனர். அதில் பயணித்த, சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த விஷ்ணு, 25, ஆனந்தபாபு, 25, மற்றும் சேலையூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், 25 ஆகியோரிடம், 6 கிலோ எடை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், ஓடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தியது தெரிவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை